நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அ மைச்சு

பொறுப்புக்கள்

  1. (1) அரசிறை மற்றும் வரி கணக்கிடல் விடயத்துடன் தொடர்புபட்ட திணைக்களங்கள் நியதிச் சட்டமுறை நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றின் கீழ் வருகின்ற மேற்கூறப்பட்ட விடயங்களில் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை தயாரித்தல்ரூபவ் மேற்பார்வை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
  2. (2) பேரண்ட நிதி முகாமைத்துவம் மற்றும் அரசிறைக் கொள்கைகளைத் தயாரித்தல்.
  3. (3) நிதி வளங்களை முகாமை செய்தல் மற்றும் வருடாந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்தல்.
  4. (4) வரவு செலவு பற்றிய நிதி கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேசிய வரவு செலவு திட்டத்தில் நடைமுறைப்படுத்துதல்.
  5. (5) அரச வருமானத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் மற்றும் தேசிய வரிக் கொள்கைகளை முகாமை செய்தல்.
  6. (6) அரச நிதி ஒழுங்கு விதிகளை அமுல்படுத்துதல்.
  7. (7) திரண்ட நிதியத்தை முகாமை செய்தல்.
  8. (8) அரச செலவின முகாமைத்துவம்.
  9. (9) அரசாங்கத்தின் பெறுகை ஆலோசனைச் சேவை.
  10. (10) திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிதிகளை நிர்வகித்தல்.
  11. (11)அரச கணக்குகள் செயற்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட திறைசேரி கூட்டங்களின் அறிக்கையை பேணிவருதல்.
  12. (12) திணைக்களங்களின் முகாமைத்துவ கணக்காய்வு மேம்படுத்துவதற்காக வழிகாட்டல்களை தயாரித்தல்.
  13. (13) பதவி அணி முகாமைத்துவம்
  14. (14) நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஏனைய சகல விடயங்களுடன் தொடர்புபட்ட விடயங்கள்.
  15. (15) நிறுவனங்களை மேற்பார்வை செய்தல்.